ஞாயிறு விடியல்

ஞாயிறும் மலர
பொழுதும் புலர
உறக்கம் தளர
மயங்கி களித்தேன் !

பதினெண்கீழ் நாடியும்
அத்துணை நரம்பும்
சில்லென சிலிர்க்க,
அறைந்ததே தண்ணீர் !

உடன்பிறந்த மக்களும்
சமவயது சகாக்களும்
இமைவீங்கித் தூங்க,
எனக்கு மட்டும் இன்செயல்!

நானும் விடுவானேன்
இந்நாளில் எழுவானேன்
தரையொற்றி தவழ்ந்தேன்
பாசாங்கில் – உறங்கியபடி !

வெளிறிப்போகும் படி
நீராலே இன்னுமொரு அடி
விடுவதாயில்லை என் சனி
ஞாயிறும் தொடரும் பணி !

நானும் சற்று வியந்தேன்
கருவெண்மையிலும் சிவந்தேன்
அழகாய்த்தான் தெரிந்தேன்
குழிவான அவன் கண்ணாடியில் !

மனதை உணர்ந்தான் போல
தட்டிக்கொடுத்தான் மேலே
நுரையாய் தலையணையாலே
கையால் தழுவ – திளைத்தேன் !

சற்றே அசந்த அந்நேரம்
மறுபடி நிகழ்ந்தது கோரம்
வாளாய் வெட்டியது வீரம்
மறுபடி வீழ்ந்தது என் சிரம் !

என்னிடம் மட்டும் வன்மம்
செத்து தொலையாத சென்மம்
ஒவ்வொரு நாளும் துன்பம்
எனக்கு மட்டுமே இச்சாபம் !

மாடியில் வாழும் தமக்கை
முன்பே வைத்தாள் வழக்கை
நரையுடன் கூடிய வழுக்கை
அவளுக்கு அல்லவோ வாழ்க்கை !

எத்துனை ஆண்டுகள் இருக்கும்
அறியாது இதுவரை எனக்கும்
சானில் என் முழம் சறுக்கும்
பிறந்தேன். வளரவே இம்முழக்கம் !

ஒன்றாய் பிறந்தது பலவே
வஞ்சிக்கப்பட்டது சிலவே
இயற்க்கைக்கு எட்டா உறவே
நானும் உணர்ந்திலேன் அறவே !

மிடுக்காய் பட்டாளம் கண்டவன்
முதிர்ந்தாலும் தவிர்க்க மாட்டான்
காலையில் எழுவது திண்ணம்
கதிரை அறுப்பதாய் எண்ணம் !

ஞானிகள் யோகிகள் எல்லாம்
பெரிதாய் வளர்ப்பது போலே
நானும் பகட்டாய் நீள
பெரிதும் ஆசை கொள்வேன் !

ஞாயிறு விட்டால் என்ன
ஏங்கிப் போவேன் நானும்
குடியா முழுகிப் போகும்
இந்த கிழம் என்று சாகும் !

அழுது புலம்பியது தாடி
உற்ற கிழவனைச் சாடி

கேட்கும் நாதியை தேடி
நாளும் புரண்டது ஓடி !

Author: goprabhakaran

23 thoughts on “ஞாயிறு விடியல்

  1. சூப்பர்.

    இது என்ன அறுசீர் ஆசிரியவிருத்தமா. அகவல் ஓசை மிகுந்து வரவில்லையே

    1. சத்தியமா அதெல்லாம் எனக்கு தெரியாது பா

  2. ரொம்ப அருமைடா…..நீ சாதாரண ஆளில்ல மச்சான்…..வாழ்த்துக்கள்…..

  3. பிறவிக் கவி(லை)ஞன் நீ….

    இயற்கையில் மயங்கி லயிக்கும் இங்கிதம் உன் பலம்…

    எல்லாவற்றிலும் இன்பம் தெரிந்தால்
    இறைவன் உன்வசம் நண்பா…!

    வாழ்க்கையை ரசிக்கும் வழக்கமே வளமை…..
    வாழிய இனிதே நண்பா…

    1. நன்றி நண்பா. இந்த ஊக்கத்தில் வளர்கிறேன்.

      1. Nalla irukkey prabha,
        Innum Niraya yezhuthu.

        Pinnoru kavingerin vimarsanam kanden, Arumai, atthiran anaivarkum illai, vaazhha nattramizh, valarha umm thamizh

  4. அருமை பிரபா…
    தமிழின் இனிமை…
    தானாய் அறிந்தவன்…

  5. Nice to read, do make it short and sweet, for more attractive. Good luck to keep writing more and more.
    Vazthukal Nanbare.

  6. மொழி வளம் கலைமகள் ஆசி…

    மொழியின் தாக்கம் ஒருவனின் ஆளுமைக்கு சாட்சி…

    தடம் மாறும் போதெல்லாம்….
    தடுமாறும் போதெல்லாம்….
    தனிமையிலிருந்தாலும் தாங்கிப் பிடிப்பது மொழி…

    ஆன்மீகம் மொழி…
    அறிவு மொழி…

    உன்னில் அவளே என்பதின் உருவே உன்னதமான உன்னருங் கவிதை…

    உன்னால் வளரும் தமிழ் உலகறியும்…
    தமிழோடு நாமும் வளர்வோம்…

  7. அருமையான படைப்பு அய்யா வரிகளில் மிக அருமையான தமிழ் உணர்வு ஏற்படுகிறது உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நீங்கள் மென்மேலும் வளர்ந்து மிக நிறைய படைப்புகளை படைக்க என் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *