தத் தத் தரி கிட

தத் தத் தரி கிட

மார்பினில் முப்பது உரோமங்கள் இருக்க 

முப்பதும் மூத்து முடங்கி கிடக்க 

உரசியபடியே உறவாடினான், 

உப்புக்கும் விளங்காத வயோதிகக்கிழவன்  |

அவனின் கண்ணில் அவளும் தோன்றினாள் 

பொய்யெனத்த்தெறிந்தும் மெய்யாய் மருகினான் 

அனலும் தணிந்த அறிவில் அணுகினான் 

அண்ணலும் தேறினான், அவளும் தேறினாள் |

நெடு நல் வாடையென வாழ்ந்த இவ்விருவரும் 

இருக்கையில் புரிந்தது மிகவும் குறைவே 

இழந்தபின் இருக்கையில் இருக்கையில் இளகி 

நாடிய நட்பே இறந்தது இழப்பே |

சகலமும் நாடி, தடம் பல ஓடி 

சிறப்புகள் கண்டோம், சிலபல நொடியே 

அவப்பெயர் இன்றி, தவப்பெயர் பெற்றது 

சிரம் நிமிர் நடை கொள 

சிவத்தவம் பெற்றோம் |

இனி என உளவாம் உலகில் நாம் தொழ 

எமையே தந்தோம் சகலரும் தழைத்திட 

அணுவும் அடங்கி அறிவும் புடைந்திட  

புலன்கள் மழுங்கி புதுமுகம் புலர்ந்திட 

புன்னகை புரிந்தான் புதிதொன்று புரிந்திட 

புதிதாய் சிரித்தான் புது உடல் தரித்திட  |

தத் தத் தரி கிட |

Tags:
2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *