நிழல் நிஜமாய் – நிஜம் நகலாய் கண் திறந்தே கற்பனையில் – காண்பதுவோ துல்லியமாய் மொழியிருந்தும் சொல்லின்றி – சொல்லறிந்தும் மொழியாமல் கேளாமல் புரிந்ததுபோல – புரியாமல் கேட்கும் செவி பார்வைகளால் பருகியதும் – வாய்ப்பிளந்தே பார்த்ததுவும் செழிப்பினிலும் வெறுமைகாண – இன்மையிலும் செழித்திருந்தோம் இடமிருந்து வலம் வந்தாய் – வலம் வந்த இடம் பெயர்ந்தேன் உனைச்சேர்ந்த எண்ணங்களால் – எண்ணுவதை மறந்துவிட்டேன் நீ சிலிர்க்கும் உணர்வுகளை – நானுண்டு நெகிழ்ந்திட்டேன் உனைச்சார்ந்த உறவுகளை – எனதாக்க