எதிர் மறையாய் – உன் எதிரே

நிழல் நிஜமாய் – நிஜம் நகலாய்

கண் திறந்தே கற்பனையில் –
காண்பதுவோ துல்லியமாய்

மொழியிருந்தும் சொல்லின்றி –
சொல்லறிந்தும் மொழியாமல்

கேளாமல் புரிந்ததுபோல –
புரியாமல் கேட்கும் செவி

பார்வைகளால் பருகியதும் –
வாய்ப்பிளந்தே பார்த்ததுவும்

செழிப்பினிலும் வெறுமைகாண –
இன்மையிலும் செழித்திருந்தோம்

இடமிருந்து வலம் வந்தாய் –
வலம் வந்த இடம் பெயர்ந்தேன்

உனைச்சேர்ந்த எண்ணங்களால் –
எண்ணுவதை மறந்துவிட்டேன்

நீ சிலிர்க்கும் உணர்வுகளை –
நானுண்டு நெகிழ்ந்திட்டேன்

உனைச்சார்ந்த உறவுகளை –
எனதாக்க எனை துறந்தேன்

வடம் தரித்து – தடம் பதித்து –
மலர் தரித்த – உற்ச்சவராய் தேர்ந்தேனே

மனம் புகுந்து – மணம் மலர்ந்து –
மதம் களைந்து – மனம் மகிழ்ந்தேன்

அகம் புறமாய் – புறம் அகமாய் –
எதிர் மறையாய் – உன் எதிரே

வாழிய நீவும் – யுகம் பல வாழியவே!

காதலர் தின வாழ்த்துக்கள்!

Author: goprabhakaran

34 thoughts on “எதிர் மறையாய் – உன் எதிரே

  1. Nanthamizh padithu
    Pala Kaalam aanadhu nanbaa
    Uunthamizh padithu
    Uvagai aanadhu en nenjam….
    Vaazhthukkal Pala….
    Nandri Nanbaa….
    Vaazhga neeveer
    Valarga nin Thamizh pulamai
    Unnal malaratum pudhiya adhyaayam….

    Kirakathudan…..
    Uun kavi mazhaiyil…..
    Uun nanban

    1. மிக்க நன்றி
      மிக்க மகிழ்ச்சி
      உன் கூற்றால் தன்யனானேன் நண்பா

    1. இதை நான் பாராட்டாகவே கருதுகிறேன்
      மிக்க நன்றி

      1. தெள்ளு தமிழ் கொண்டு கள்ளுண்ணும் கயவன் நான்..
        தமிழ்ப் போதையிலே கிடப்பவனில் பேதை நயம் கூட்டிடவே
        காதல் பாடிக் களித்திட்டாய்…

        மறையிலே, நேர் என்றும் எதிர் என்றும் கண்டார் யாருமில்லை;

        அறம் என்று பொருள் கொண்டால் “மறை” என்றும் நேர்மறையே…

        அதற்கெதிராய் பதம் வேண்டி “எதிர் மறை” உதித்ததெனில் எனக்கொன்றும் வருத்தமில்லை…

        இனிக்கின்ற காதலிலே எல்லாமும் நேர்மறையே…

        ஆங்கிலச் சொலவடையில் -“காதல்-குருடானது” – என்றதும் இதனாலே…

        வாழிய நண்பா…
        வளமார் உளம் நமக்கு; வாழாமல் மடியாது…

        “காதலி”ன் இணைச் சொல்லாய் ” மோதலை” ச்சொல்லிடலாம்…

        மோதலது இல்லாமல் மின்னலும் தான் பிறந்திடுமோ?

        சாதிக்குச் சாவுமணி காதலாலே அடித்தோமே…; ஆதியிலே நட்பு என்றால் …

        1. குழலினிது யாழினிது என்பர், என் நண்பன் உன் தமிழ் ஓதாதவர். நன்றி நண்பா.

    1. ” நிழல் நிஜமாய் – நிஜம் நகலாய் ”
      அருமை 🕊💐

  2. Azhagu…. and awesome……
    Thearndha kavingharluku undaana nadai…… You have played with words.
    I feel you are a better writer in Tamizh than in English…..
    I was able to relate connect and read till the end without signing out…..
    Semma… Varta…….

  3. It’s a hit da…. Super hit….
    Do you know why…
    It’s a poem….
    Your English write up are in prose….
    This is my perception…
    Views may differ… It may be the other way too….

  4. அழகு தமிழ்
    எளிய தமிழ்
    தெளிந்த வார்த்தைகள்
    இனிதாய் இது தொடர
    வாழ்த்துக்கள் நட்பே.

  5. அருமை! அருமை!
    இதை இளம் காதலர்கள் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் .
    ஆனால் இந்தப் பக்குவத்துடன் சொற்திறனும், மொழித்திறன், பொருட்சுவையுடன் இளம் வயதில் வருவதில்லை. நன்று, நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *