September 14, 2026
விநாயகா – சதுர்த்தி நல்வாழ்த்துகள்
தும்பிக்கை தரித்தவனே ! நம்பிக்கை நாயகனே !
துதிப்போர்க்கு மூத்ததவனே ! தேவையுணர்ந்து தீர்ப்பவனே !
அறிவினால் சிறந்தவனே ! அமைதியில் தெளிந்தவனே !
அண்ணனாய் அணைத்தவனே ! அன்பினால் பிணைத்தவனே !
முக்கோடி தேவரிருக்க ! முதல்வனாய் நீயிருக்க !
மூவுலகும் இன்புற்றிருக்க ! மூலமாய் உன் வினா இருக்க !
‘ஏன்’ எனும் எம் இயல்பிருக்க ! ‘ஓம்’ என உம் பதிலிருக்க !
சங்கடங்கள் புறமிருக்க ! எங்களை நீ காத்தருள்வாய் !
வேதங்கள் கற்றபின்னும் ! போதாதா வேட்கை இன்னும் !
கற்றிடவே கற்பிக்கும் உனக்கு ! சொற்றொடரில் வாழ்த்த விழைவு!
எண்ணித் துணிவது கருமம் ! துணிந்தபின் எண்ணுவது எதற்கு !
பிறந்த நாள் வாழ்த்துக்கள் உமக்கு ! சொல்வதில் சிறப்பு எமக்கு !

