உன்னை அழித்ததால்.. வீணாய்ப்போனவன்

நெஞ்சில் ஈரமின்றி
நினைவில் சுமைகளின்றி
அன்பர்களை அழவிட்டு
ஆழமாய் உறங்குகின்றான்

கடமைகள் ஏதுமில்லா
உடமைகள் தானும் கொள்ளா
களியில் காலம்தீர்த்த
எளிய கிள்ளியவன்

அழகாய் விளைந்தோமே
சிறகாய் பறந்தோமே
சீராய்தான் சிறுபருவம்
சிறப்பாய்தான் இருந்ததுவே

நட்பின்பால் நாம்கொண்ட
நன்னெறியில் எங்கு பிழை
எங்கேதான் பிசகியதோ
வழக்கங்களில் ஏதோ ஓர் இழை

செய்வதறியா ஒர்பருவம்
அறிந்தும் ஆற்றாத மனநிலையில்
காலம் காற்றாய் பறந்திடவே
மயிரும் நரைத்தது உறவுகளில்

இவனும் பண்புற்றிருந்திட்டால்
வாழ்க்கை முழுமை ஏற்றிருக்கும்
என்றொரு ஏக்கம் தந்திட்டாய்
பேரின்பம் நீ அடைந்திட்டாய்

ஈரம் சொறியா கண்களிலும்
தாரை தாரை வார்திட்டாய்
ஏதும் இடரா துறவியைப்போல்
வாழ்க்கை தனையே தொலைத்திட்டாய்

அன்பர் அனைவரும் ஒர்சேர
விடியா இரவின் இருள்தீர
ஆடிய புலனும் அடங்கிடவே
நண்பா ஏனுயிர் துறந்திட்டாய்

சற்றே காலம் வாழ்ந்திருந்தால்
அர்த்தம் ஏதும் புகண்டிருக்கும்
எண்ணம், இயக்கம் செரித்திருக்கும்
உனக்கும் இனமாய் தழைத்திருக்கும்

ஆக்கமும் அழிவும் அவன் செயலே
தழைப்பதும் வதைவதும் அவன் பொருளே
உயரே இருந்து இயக்குபவன்
உன்னை அழித்ததால்..

    வீணாய்ப்போனவன்..

Tags:
2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *