“நான்” இழந்த எனை தேடி


படித்ததில் பயின்றதில்

பகுத்தறிய பழகிவிட்டேன்

சிந்தைதனில் சந்தம்போக

சத்தங்களே எஞ்சியது.

நிம் மொழியில் நீர் உரைக்க

சான்றோறும் சிறப்புரைக்க

புரிந்ததாய் ஒரு தருணம்

புதிராக மற்றொன்று.

எதுவாயினும் பார்த்திடலாம்

ஏதெனினும் தேற்றிடலாம்

சூளுரைத்தே வந்திட்டேன்

உம்முன்னே நின்றிட்டேன்.

கேள்விகளை துறக்கின்றேன்

எனை தேடி அலைகின்றேன்

சிறகாகி பறக்கின்றேன்

சிறுவனாய் சிரிக்கின்றேன்.

சலனங்கள் ஏதுமில்லை

சாகசங்கள் கோரவில்லை

எனை காணும் தருணம்

குருவே உனக்கு சரணம் !

14 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *