ஒண்ணு தறுதல இன்னொண்ணு தாந்தோணி !

எட்டுக்கு பத்தாக

ஒண்டு குடித்தனத்தில்

கூலிக்கு வேல செஞ்சி

குடும்பத்த கொண்டுவந்தேன்

பெத்தது ரெண்டும்

பையன்களாப் போக

செலவு மிச்சமுண்ணு

சந்தோஷப்பட்டுட்டேன்

வேளை வந்ததும்

வெளிச்சம் வந்தது

தப்பா கணக்கு

நான் போட்டுட்டேன்

நான் வளர்த்த

விதம் சரியில்லே ..

ஒண்ணு தறுதல

இன்னொண்ணு தாந்தோணி !

புள்ளைங்கள கரைச்சி

கொட்டரியே, நீ அப்பனா ?

நீ என்ன பெருசா

கிழிச்சிட்டே, சுப்பனா ?

நான் கண்டிக்கும்போதெல்லாம்,

என்னை தண்டிப்பா பாரு

சோத்துல தண்ணிய ஊத்துறதும்,

குழம்புல காரத்தை ஏத்தறதும்

எவ சொல்லி கொடுத்தாளோ,

இன்னமும் கெடுத்தா .. என் பொண்டாட்டி

படிப்பு வாசம் ஏறாத ஒருத்தன்,

பேப்பர் போட்டு நிறுத்திட்டான்

எழுத்து கூட்டி, படத்தை பார்த்து

விஷயம் மட்டும் தேத்திட்டான்

ஊரு வம்பு தேடி புடிச்சா,

தனக்கு டீ சாப்பிட்டதா நெனப்பு

கட்டப்பஞ்சாயத்து, சட்டம்,

பேசறதே வெட்டிப்பய பொழப்பு

வருஷம் போயி வயசு வந்து

ஜோடி போட துடிக்குது

கரை வேட்டி கரை சட்ட,

வேலை கேட்டா வெரட்டுது

கொஞ்சம் விஷயம்,

கொஞ்சம் படிப்பும்

தெரிஞ்சி ஒருத்தன்

வெளங்கிட்டான்….ன்னுஇருந்தப்போ..

காதல் தோல்வி, கண்ராவின்னு,

நிதமும் குடிக்க பழகிடடான்

ஏழு தெருவில் எட்டு கடை ,

எதையும் விட்டு வெக்கல

நாளு முழுக்க வேல செஞ்சும்,

நாலு காசு நிக்கல.

ஊறுகா வித்து பொழச்சா,

ஊருக்குள்ளே நிக்கலாம்

கூறுகெடட குடிய குடிச்ச்சா,

நாண்டுக்கிட்டே போகலாம்

சொந்தக்காரன் வந்து கேடடா,

எங்கடா புள்ளைங்க

சொல்றதில்ல, மெல்றதில்ல,

எச்ச்சு முழுங்குவேணுங்க

மீறி எவனும் அழுத்தி கேடடா,

வந்துரும் என் வாயிலே

ஒண்ணு தறுதல

இன்னொண்ணு தாந்தோணி !

4 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *