பழந்தமிழை பிசைந்தூட்டிய தமிழ்ப்பழமே

செம்மொழியாய் தமிழ் மாற
நீயாற்றிய பணியன்றி
நீயல்லால் வேறொருவர்
இதை செய்ய இயலாது.

நீயின்றி வள்ளுவனை யாரறிவர்
பல்காப்பியமும் உன்னாலே உயிர் பெற்றது.
சதுரத்தில் வட்டமென வாழ்ந்தவர்கள்
சட்டங்கள் இல்லாமல் சொல்லா கேட்பர்

சாதிகள் இல்லையென பாரதி சொன்னான்
அதை இன்றும் பாப்பாக்கள் ஏற்கவில்லை.
நீ மட்டும் சட்டமொன்று இயற்றாவிடில்
அய்யகோ என்னாகியிருக்கும் தமிழ்நாடு –
நீ செய்த சிறப்புகள் இல்லாது

மதங்கள் மதம் பிடிக்க செய்யாவண்ணம்
இதயத்துடன் வரைந்திட்டாய் திட்டம் நூறு.
அறிவே அரியவை பெறவே உகந்ததென
உணர்த்திய உன் நுண்ணறிவை வியக்கிறேன்

வடமொழிக்கு வாழ்க்கைப்பட்டவர்
தாய் மொழியை தவிர்த்துவிட்டவர்
தமிழை ஒழித்துவிட்டால்,
ஏழைகள் என்னாவர்.

தாய் மொழி வழி கல்வி
பள்ளியின்பால் ஈர்த்தது.
உயர்கல்வி பயில்வதற்கு
ஊன்றாக விளைந்தது.

மொழி சார்ந்த விஷயங்களே
நீ தந்தாய் என்றிருந்தோம்.
நீ சென்றாய், பின் புலர்ந்தது

செவ்வனே நீ செய்த சேவைகள்.

கலைகளும் கடந்து, அரசியல் புரிந்து
மலைகளை பிளந்து, நீ எழுந்தாய்,
உதய சூரியனாய் – இன்று
நீயே வானம் பார்க்கப்போனாய்.

18 Comments

Leave a Reply to G Sundaravadivu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *