முட்டை
ஒரு முட்டை 28 ருபாய்
அச்சத்தை போக்க அச்சிட்டிருந்தது
காரணங்கள் 28
முட்டையின் மேல், அட்டையில்
கோழியின் கான்டக்ட் சர்டிபிகேட் (conduct certificate)
உட்பட
பேரிக்காய்
கிலோ 448 பேரிக்காய்
பைசா கணக்கில் வாங்கிய ஞாபகம்
பள்ளி நாட்களில்
இன்று இம்போர்ட்டட் (imported)
அந்நியமானது, பழங் காய்கள்.
கொசுரு
எடைக்கு மேல கேட்டதும்
தல தட்டாது அளந்ததும்
எச்சமாய் (கொத்த) மல்லி, (கரு)வேப்பிலை
இன்று இல்லை
கிராம் கணக்குல எடை, சில்லறையை சேர்த்து
கொசுறு நீக்கப்பட்டது
அகராதியிலிருந்தே